For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டார்கெட் நிறுவனத்துக்காக கனடா செல்லும் பெங்களூர் வல்லுநர் குழு!

By Mathi
Google Oneindia Tamil News

Target Logo
வாஷிங்டன்: அமெரிக்காவின் 3-வது பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான டார்கெட் கனடாவில் கால் பதிக்க ஆயிரக்கணக்கான துறைசார் இந்திய வல்லுநர்கள் உதவ இருக்கின்றனர்.

கனடாவில் நூற்றுக்கணக்கான சங்கில்த் தொடர் விற்பனை நிலையங்களை டார்கெட் நிறுவனம் அமைக்க உத்தேசித்துள்ளது.

இவற்றின் உள்கட்டமைப்பு தொடங்கி முற்று முழுதாக அனைத்தையும் நிர்மாணிக்க பெங்களூருவில் உள்ள அதன் பணியாளர்களையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது டார்கெட் நிறுவனம்.

இதற்காக பெங்களூரில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் கொண்ட குழு கனடா செல்ல உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப் பணிகளுக்காக மட்டும் 1 பில்லியன் டாலரை செலவிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கனடாவில் 20 ஆண்டுகளாக மற்றொரு மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வேரூன்றி இருக்கும் நிலையில் டார்கெட் தமது இலக்காக 68 பில்லியன் டாலரை நியமித்துள்ளது என்கிறார் இந்தியாவில் தொழில்நுட்ப மையத்தை அமைக்க உறுதுணையாக இருந்த டார்கெட் நிறுவனத்தின் அதிகாரி கைன் கைசர்.

அமெரிக்காவை விட்டு கடந்த நூறாண்டில் டார்கெட் நிறுவனம் வெளிநாடு ஒன்றில் கால் பதிப்பது இதுவே முதல்முறை.

பெங்களூரில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்ட போது ஒரு குழுவாக இருந்தது. இப்போதே ஒரு தவிர்க்க முடியாத பெரும்சக்தியாக உருவெடுத்திருக்கிறது என்கிறார் கைன் கைசர்.

டார்கெட் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை இலக்காக 1 பில்லியன் டாலரை இலக்காக நியமித்திருக்கிறது.

இதேபோல் ஐரோப்பாவின் டெஸ்கோ நிறுவனமும் பெங்களூரில் தமது மையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

English summary
Target Corp, the US' third largest retailer, is aiming to set up shop in Canada next year. For its maiden overseas foray, the Minneapolis-based company has set its sights thousands of miles away on its technology centre in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X