For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கிறது?

By Mathi
Google Oneindia Tamil News

U T I
டெல்லி: வீடு, வாகனங்கள், சொத்துகள் உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் கட்டணங்கள் ஏப்ரல் மாதம் மூலம் அதிகரிக்கப்பட உள்ளது.

தேசிய மறுகாப்பீட்டாளர்கள் மறும் பொது காப்பீட்டுக் கழகங்கள் நட்டத்தை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான வர்த்தகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வோர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த் 7-ந் தேதியன்று இத்தகைய கடிதம் ஒன்றை நிதி அமைச்சகம் அனுப்பியிருகிறது.

மேலும் அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்பீட்டுத்துறையானது ஒரு மறுகாப்பீட்டு நிறுவனமாகும். இதர பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே அரசு காப்பீட்டு நிறுவனம் மீது தங்களது சிக்கலான வர்த்தக நடவடிக்கைகளை திணிப்பதை முறைப்படுத்த உரிய சட்டம் தேவை என்கிறது மத்திய அரசு.

இதனால் சொத்துகள், வாகனங்கள் மற்றும் தனிநபரின் உடல்நலனுக்கான இன்சூரன்ஸ்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க பொதுக்காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏதாவது ஒரு பொய்க் காரணங்களைக் காட்டி இன்சூரன்ஸ் பெறுவோரின் எண்ணிக்கையைத் தடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை அமையும் என்று கூறப்படுகிறது.

English summary
Buying general insurance such as health, motor or property cover could cost more from April. The finance ministry has asked the national reinsurer, General Insurance Corporation, to stop underwriting loss-making businesses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X