For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்கவுன்டர் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த பீகார் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Bihar Assembly
பாட்னா(பீகார்): சென்னையில் பீகாரைச் சேர்ந்த 4 வங்கிக் கொள்ளையர்கள் உட்பட 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசை பீகார் மாநில அரசு கோரியுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவையில் சென்னை என்கவுன்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.

"போலீஸுடனான மோதலில் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக அரசு விசாரணை விசாரணை நடத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுட்டுக்கொல்லப்பட்டோரில் கொள்ளைக் கும்பல் தலைவன் வினோத்குமார் உட்பட 4 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஒருவன் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன்.

சென்னை பெருங்குடி மற்றும் கீழ்கட்டளை ஆகிய இடங்களில் வங்கிகளில் ரூ35 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக கொள்ளைக் கும்பல் தலைவன் வினோத்குமார் படத்தை சென்னை காவல்துறை வெளியிட்ட 10 மணி நேரத்தில் கொள்ளை கும்பல் கூண்டோடு சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Bihar government has asked Tamil Nadu to probe the killing of five men, including four from Bihar, who were shot dead by police after being branded bank robbers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X