For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் ஆண்கள் கழிவறைகளை பெண்கள் பயன்படுத்தி போராட்டம்- திணறிப் போன ஆண்கள்

Google Oneindia Tamil News

Men's toilet occupy protest in China
பெய்ஜிங்: சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, ஆண்களின் கழிவறைகளை பயன்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் பொது கழிவறைகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் நாட்டில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, ஆண்களின் கழிவறைகளை பெண்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதற்காக ஆண்கள் கழிவறைகளின் முன் போராட்ட பேனர்களை கட்டிவிட்டு, அவற்றை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போராட்ட பேனர்களில், பெண்களுக்கு அதிக வசதிகள் தேவை. அவளை நேசிப்பதாக இருந்தால், அவளை காக்க வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி மாணவிகள் சிலர் கூறியதாவது,

நாட்டில் உள்ள ஆண்கள் கழிவறைகளின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் கழிவறைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் ஆண்கள் கழிவறைகளில் செலவிடும் நேரத்தை காட்டிலும், பெண்கள் 2 அல்லது 3 மடங்கு நேரம் அதிகம் செலவிட வேண்டியுள்ளது.

இயற்கை உபாதைகளை அடக்கி வைப்பது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மிக கடினம். பெண்களின் கழிவறைகளுக்காக காத்திருப்பதை காட்டிலும், ஆண்களின் கழிவறைகளை பயன்படுத்துவதால் நேரம் வீணாவதை தவிர்க்க முடிகின்றது என்றனர்.

கடந்த 19ம் தேதி முதல் இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தற்போது குவான்ஷு நகரில் பெண்களுக்கு கூடுதல் கழிவறைகளை கட்டப்பட்டு வருகின்றது. குவான்ஷு நகரில் கல்லூரிகளில் உள்ள பெண்கள் கழிவறைகள் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்சினை, ஒரு போராட்டம்...

English summary
Women were protesting with occupying Men's toilets in China. Women needs their toilets to be incresed in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X