For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலில் பயணம் செய்யும் 58 வயது பெண்களுக்கும் கட்டண சலுகை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ஆண்களுக்கு 40 விழுக்காடாக உயர்கிறது. கட்டண சலுகை பெறும் பெண்களுக்கான வயது வரம்பு 58 ஆக குறைக்கப்படுகிறது.

ரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 60 வயதான ஆண்களுக்கு 30 விழுக்காடு கட்டண சலுகையும், 60 வயதான பெண்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான சலுகையில் ஆண்களுக்கும் 40 விழுக்காடு கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றும், பெண்களுக்கான வயது வரம்பை 58 ஆக குறைக்க வேண்டும் என்றும் டெல்லி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கிரண் வாலியா ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதை ரெயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டு உள்ளது.

இதன்படி, ரயிலில் பயணம் செய்ய 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு தற்போது வழங்கப்படும் 30 விழுக்காடு கட்டண சலுகையை 40 விழுக்காடு உயர்த்தவும், பெண்களுக்கான வயது வரம்பை 60-ல் இருந்து 58 ஆக குறைக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

இந்த தகவலை ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா டெல்லி மாநில அமைச்சர் கிரண் வாலியாவுக்கு தெரிவித்து இருப்பதாக, அம் மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

English summary
Women aged 58 years will be eligible to avail 50 percent concession as senior citizens while men in the category will get a 40 per cent cut in their train fares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X