For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு உலை ஆபத்தை செர்னோபிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்: கோர்ப்பசேவ்

By Mathi
Google Oneindia Tamil News

Gorbachev
மாஸ்கோ: அணு உலைகளால் ஏற்படும் ஆபத்தை செர்னோபில் அணு உலை வெடிப்பு விபத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசியாவின் முன்னாள் அதிபர் கோர்ப்பசேவ் எச்சரித்துள்ளார்.

1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி ரசியாவின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த அணு உலை விபத்து நிகழ்ந்து 25-வது ஆண்டு இது, இவ்விபத்தின்போது அதிபராக இருந்தவர் கோர்ப்பசேவ்.

அணுசக்தி தொடர்பான சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கோர்ப்பசேவ் எழுதிய கட்டுரையில் அணு உலை ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் எழுதியுள்ளதாவது:

சர்வதேச அளவில் மக்கள் தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் எரிசக்தியின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காற்று, சூரிய ஒளி, நீர் போன்ற மரபுசாரா எரிசக்தித் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

அணுசக்தியை பயன்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அணு உலைகள், அணுக் கழிவு போன்றவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் ஏற்படும் அழிவு எண்ணிப்பார்க்க முடியாதது.

அணு உலைகளினால் ஏற்படும் ஆபத்தை செர்னோபில் அணு உலை வெடிப்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். செர்னோபில் விபத்தானது முழுவதும் தொழில்நுட்பக் கோளாறால், மனிதத் தவறால் ஏற்பட்டது. இந்த விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை தொடக்கத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்கும் எனக் கருதினோம். ஆனால் பின்னர்தான் அது பெரும் விபத்து என்பதை உணர்ந்தோம் என்று அதில் கோர்ப்பசேவ் கூறியுள்ளார்.

English summary
The upcoming 25th anniversary of the Chernobyl disaster is a brutal reminder of the dangers of nuclear power, proliferation and terrorism, former Soviet president Mikhail Gorbachev said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X