• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாவதற்கு முன்பு எனது அழகை ரசித்தார் வினோத்குமார்: அல்போன்சா

|
Alphonsa and Vinodh Kumar
சென்னை: எனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

மார்பில் கட்டிய துண்டோடு ஓடி வந்தார்

அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

கணவர் பேச்சை மீறி வினோத்குமாருடன் பழகிய அல்போன்சா

வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actress Alphonsa has said that my love with Vinodh Kumar is true and he took the decision suddenly, she added.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more