விலைவாசி உயர்வே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்: சோனியா

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு தேர்தல் முடிவும் எங்களுக்கு ஒரு பாடம் தான். அந்த வகையில் இந்தத் தேர்தல் தோல்விகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம. எங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக ராகுல் காந்தி கடுமையாக பாடுபட்டார். ஆனாலும் தோற்றுள்ளோம். இந்தத் தோல்வியை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். உத்தரப் பிரதேசத்தில் கட்சிரீதியில் நாங்கள் பலமாக இல்லை, கட்சியின் கட்டமைப்பே சரியில்லை. வேட்பாளர் தேர்வும் சரியல்ல. அது போக ஏகப்பட்ட காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் களத்தில் குதித்து கெடுத்துவிட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவுகளால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் வராது. எங்களது கவனம் எல்லாம் 2014ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலின் மீது தான் இனி இருக்கும்.
தேர்தல் தோல்விக்கு ஊழல் காரணமல்ல. ஊழல் விஷயத்தில் நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தோம்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் ஏராளமாக உள்ளனர். இது தான் எங்களது பிரச்சனை (அதாவது கட்சியில் தொண்டர்கள் கம்மி, எல்லோருமே தலைவர்கள் தான் என்ற அர்த்தத்தில் கூறினார்).
தோல்விக்கு பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து குஜராத், கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளன. அதற்காக இப்போதே தயாராவோம் என்றார் சோனியா.
வரும் 2014ம் ஆண்டில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, நாம் 2012ல் இருக்கிறோம். நீங்கள் 2014 பற்றி கேட்கிறீர்கள். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இப்போது இந்தக் கேள்வியே தேவையில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications