For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலந்தி்ல் 75 நாட்கள் தலைகீழாக இருந்து இரட்டையர்களைப் பெற்ற பெண்

By Siva
Google Oneindia Tamil News

Baby
ரோக்லா: போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகப் பெரிய ரிஸ்க்குக்கு மத்தியில் தனது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக பெற்றெடுப்பதற்காக கிட்டத்தட்ட 75 நாட்கள் அவர் அசாதாரணமான பொஷிசனில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோவன்னா. கர்ப்பமாக இருந்த அவரது வயிற்றில் 3 குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில்ல, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. ஆனால் வயிற்றில் உள்ள மற்ற 2 குழந்தைகளையும் காப்பாற்ற முடிவெடுத்த டாக்டர்கள், அதற்காக சில அசாதாரணமான யோசனைகளை தெரிவித்தனர். அதை ஏற்றார் ஜோவன்னா. அதன்படி அவர் கிட்டத்தட்ட தலைகீழாக வைக்கப்பட்டார். இதற்காக படுக்கையையும் அதற்கேற்ப மாற்றியமைத்தனர்.

வயிற்றில் இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ஜோவன்னா 24 மணி நேரமும் தலைகீழாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரும் ஒப்புக்கொண்டு தலைகீழாகவே 75 நாட்களை கழித்தார். அதன் பிறகு பிரசவம் நடந்து 2 குழந்தைகளை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். அதில் ஒன்று ஆண், இன்னொன்று பெண்.

ஆண் குழந்தைக்கு இக்னேசி என்றும், பெண் குழந்தைக்கு இகா என்றும் பெயர் சூட்டியுள்ளார் ஜோவன்னா. தற்போது இரு குழந்தைகளையும் சிறப்பு இன்குபேட்டரில் வைத்துள்ளனர். விரைவில் ஜோவன்னா தனது குழந்தைகளுடன் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
A Polish woman Joanna Krzysztonek from Wroclaw has given birth to twins after lying upside down for 75 days. She was expecting triplets and gave birth to a baby after 5 months of pregnancy. But doctors were unable to save that child. Then after lying upside down with her legs up for 75 days she gave birth to a baby boy and a girl.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X