For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய கடன் பிணையை பெற கிரீஸுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது

By Mathi
Google Oneindia Tamil News

Greece
ஏதென்ஸ்: ஐரோப்பிய நாட்டின் கடன் பிணையை பெறுவதற்காக கிரீஸ் நாட்டு வங்கிகள் மற்றும் தனியார் வைத்திருக்குக்கும் கடன் பத்திர மதிப்பில் ஏற்படும் இழப்பை சந்திக்க ஒப்புக்கொண்டதால் அந்நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ¤க்கு இரண்டாவது தவணையாக கடன் பிணையை வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானித்திருந்தன.

பிரஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் 13 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எட்டப்பட்டது..

இதன்படி கிரீஸ் அரசு திவாலாவதைத் தடுக்க 170 பில்லியன் டாலர் கடனுதவியை ஐரோப்பிய நாடுகள் வழங்க முன்வந்தன. இந்த கடனுதவி மூலம் கிரீஸ் மார்ச் 20-ந் தேதிக்குள் வழங்க வேண்டிய கடன் தொகையை வழங்க முடியும்.

ஆனால் ஐரோப்பிய கடனுதவியை பெறும் கிரீஸ், அந்த ஒப்பந்தப்படி உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் கிரீஸ் கடன் பத்திரத்தை வைத்திருக்கும் தனியார்கள்அந்த கடன் பத்திரத்தின் மதிப்பில் 53.5% இழப்பை சந்திக்க வேண்டி நிலை ஏற்பட்டது. கிரீஸ் அரசு பொது ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒதுக்கீட்டில் 3.3 பில்லியன் யூரோக்களை குறைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த கடன் பத்திர விவகாரத்தில் தங்களது இழப்பை ஏற்று கிரீஸ் அரசுடன் ஒத்துழைக்க தனியார்கள் முன்வந்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றி நாடுகள் வழங்க முன்வந்துள்ள கடன் பிணையை பெற ஜன்னல் திறக்கப்ப்பட்டுவிட்டது. இது ஒருவரலாற்று நிகழ்வு என்று அந்நாட்டின் பிரதமர் லூக்காஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஐரோப்பிய கடனுதவியால் 2020 ஆம் ஆண்டில் கிரீச் அதன் உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதத்தை 120.5 ஆகக் குறைத்துக் கொள்ளும். கடந்த 5 ஆண்டுகளாக கிரீஸின் கடன் விகிதம் 160 விழுக்காடாக நீடித்துக் கொண்டே வந்தது.

கிரீஸ் பொருளாதார சிக்கலானது நிதி நெருக்கடியில் தவிக்கும் ஒருநாடானது அதிலிருந்து மீள்வதற்கான கடனுதவியை பெற தமது மக்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்தாக வேண்டிய ஒரு புதிய நடைமுறை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுகிறது.

English summary
Greece's private creditors agreed on Friday to take cents on the euro in the biggest debt writedown in history, paving the way for an enormous second bailout for the country to keep Europe's economy from being dragged further into chaos.Greece would have risked defaulting on its debt in two weeks without the agreement, sparking turmoil in the markets and sending shock waves through the other 16 countries that use the euro.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X