For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பருத்தி ஏற்றுமதி தடை: மத்திய அரசு நிலை மாற்றம்

By Mathi
Google Oneindia Tamil News

Cotton
டெல்லி: பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பி நிலையில் தடையை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 10 லட்சம் பருத்தி பேல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், உள்நாட்டில் அவற்றுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் மற்றும் குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட பலரது எதிர்ப்பையடுத்து, இப்போது தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் சர்மா

இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ""விவசாயிகள், வியாபாரிகள், பருத்தியை சார்ந்த தொழிற்சாலைகளின் நன்மையைக் கருதி சமநிலை நோக்குடன் தீவிர ஆலோசனைக்கு பின்தான் இந்த முடிவை அமைச்சர்கள் குழு எடுத்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்படும்'' என்றார்.

பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் முடிவு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

English summary
The ban on export of cotton imposed earlier this week is to be lifted, decided a Group of Ministers (GoM) looking into the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X