For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு நிதி பெற விமான நிறுவனங்களுக்கு அனுமதிப்பது பற்றி பரிசீலனை: பிரணாப்

By Mathi
Google Oneindia Tamil News

Vijay Mallya
டெல்லி: விமான நிறுவனங்கள் நிதிநெருக்கடியிலிருந்து மீள வெளிநாட்டிலிருந்து 1பில்லியன் டாலர் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய விமானத்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதமாக ஓராண்டு காலத்துக்கு 1 பில்லியன் டாலர் கடனாக பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

விமானசேவை துறையில் 49 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்திய விமானசேவை துறையில் முதலீடு செய்வதற்கான தடையானது பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்தும் அமலில் இருக்கும்.

இதேபோல் விமான நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை செலவினங்களுக்கு ஏற்ப மாற்றிய அமைப்பதும் அவசியம் என்றார் அவர்.

இந்திய விமான நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 2.5பில்லியன் டாலர் தொகை தேவைப்படுகிறது. இதில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் 1.32 பில்லியன் டாலர் தேவை உள்ளது.

English summary
In a bid to address concerns of the cash-strapped Indian civil aviation sector, Finance Minister Pranab Mukherjee Friday proposed to allow domestic airlines to borrow up to $1 billion in external loans for a period of one year."To address the immediate financing concerns of the civil aviation sector. I propose to permit external commercial borrowing (ECB) for working capital requirement for the airline industry for a period of one year subject to a ceiling of $1 billion," Mukherjee said while presenting the union budget 2012-13 to the Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X