For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதுகாப்பு துறைக்கு ரூ1.93 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-சி.பி.ஐக்கு 15% கூடுதல் நிதி

By Mathi
Google Oneindia Tamil News

Indian Army
டெல்லி: நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடானது ரூ1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

2011-12ம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு ரூ1 லட்சத்து 64 ஆயிரத்து 415 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பு 2012-13ம் ஆண்டில் கூடுதலாக ரூ. 28 ஆயிரத்து 992 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி.

இதில் ராணுவத்துக்கு மட்டும் ரூ. 79 ஆயிரத்து 579 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் இது கூடுதலாகும். மத்திய ஆயுதப் படை காவலர்களுக்கான வீடுகள் கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ. 1,185 கோடியும் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 3,280 கோடியும் இதில் அடக்கம்

சி.பி.ஐக்கு கூடுதல் நிதி:

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐக்கும் 15 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2011-12ம் நிதியாண்டில், ரூ. 344.64 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இந்த நிதி 15 சதவீதம் ரூ. 395.77 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இ-கவர்னன்ஸ், நவீனமயம், பயிற்சி மையங்கள் அமைத்தல், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப சப்போர்ட் யூனிட்கள் அமைத்தல், சி.பி.ஐ கிளை அலுவலகங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
To give a further push to its rapid military modernization, India Friday hiked its military spending by over 17 percent to Rs.1,93,407 crore (over USD 42 billion/Rs.1.93 trillion).In real terms, this increase amounts to Rs.28,992 crore (USD 6.5 billion) in the total outlay for defence for 2012-13 compared to Rs.1,64,415 crore (USD 36 billion) for the previous year (2011-12).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X