For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளின் ஓட்டுக்கு காங். மீண்டும் குறி.. கடன் வழங்க ரூ. 5.75 லட்சம் கோடி ஒதுக்கீடு!

By Chakra
Google Oneindia Tamil News

Farmers
டெல்லி: 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ. 50,000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாதி பணம் தனியார்துறையினரிடமிருந்து வரும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அவர் கூறுகையில்,
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள் கட்டப்படும். அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடியாக உயர்த்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைக்கப்படும்.

ராஜிவ் காந்தி பெயரில் பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரையிலான முதலீட்டுக்கு 50 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும்.

அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு நிதி திரட்ட ரூ. 60,000 கோடிக்கு வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்.

மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்

பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ.12,040 கோடி ஒதுக்கப்படும். ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடியும், நாடு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ரூ.11,937 கோடியும். கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ.24,000 கோடியும் ஒதுக்கப்படும்.

விவசாயத்துறையைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளுக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்த்தப்படும்.

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகமாகும்.

நீர்ப்பாசனத்துக்கு என தனி நிறுவனம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிஸான் கடன் அட்டைகளை, ஏடிஎம்களிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Finance Minister Pranab Mukherji emphasized that agriculture will continue to be priority for the government. He has raised the agriculture credit target to Rs 5.75 lakh crore in FY13. He also proposed to allocate Rs 10,000 crore for NABARD for refinancing RRB. This is what Mukherji had said in his Budget speech in February 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X