For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2010-ல் ஒபாமாவைக் கொல்ல திட்டமிட்ட ஒசாமா!

By Shankar
Google Oneindia Tamil News

osama Bin Laden and Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமைவைக் கொலை செய்து, அந்நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் விமானம் மூலம் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இது அமெரிக்காவை அதிர வைத்தது. அந்நாட்டு வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக அமைந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஒசாமா பின்லேடனை ஒழிக்க அமெரிக்க ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத் நகரில் பின்லேடன் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்தது.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியில் இறங்கிய அமெரிக்க ராணுவ கமாண்டோ படை, கடந்த மே 2-ந்தேதி அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக் கொன்றனர். மேலும் அவரது அறையில் இருந்த கணினிகள். செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்கப்படை கைப்பற்றியது. அதனை ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவை, அமெரிக்காவில் வைத்தே படுகொலை செய்வதற்கு ஒசாமா பின்லேடன் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் அதில் இருந்தன. இந்தக் கொலை மூலம் அமெரிக்காவில் நிலையற்ற தன்மையை உருவாக்க முடியும் என்றும் ஒசாமா கூறியிருந்தார்.

இது குறித்து அல்கொய்தா இயக்கத்தினருக்கு பின்லேடன் அனுப்பிய கடிதங்கள், குறிப்புகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 2010-ல் இந்த திட்டத்தைத் தீட்டியுள்ளார் பின்லேடன்.

மேலும் அமெரிக்கா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துங்கள் என்றும் அவரது இயக்கத்தினருக்கு அவர் கட்டளை பிறப்பித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
In his final days, al-Qaida chief Osama bin Laden was planning assassination attempts against US President Barack Obama and another attack on the American soil, according to a media report on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X