For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டாக இருந்தால் சம்பளம் கட் ; இங்கிலாந்து அரசு அதிரடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Obesity
லண்டன் : இங்கிலாந்தில் போலீசார் உடல் ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ்துறைக்கு தேர்தெடுக்கும்போது ஆரோக்கியம், கட்டுமஸ்தான உடல் ஆகியவற்றை சரிபார்த்துதான் தேர்தெடுக்கின்றனர். ஆனால் வேலையில் சேர்ந்த உடன் பெரும்பாலான போலீசார் உடலை கவனிப்பதில்லை. நாளடைவில் தொப்பையும், குண்டு உடலுமாய் போலீசார் காட்சியளிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

8 சதவிகித சம்பளம் கட்

இங்கிலாந்து நாட்டில் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

இதில் 53 சதவீதம் போலீசார் உடை அதிகரித்து குண்டாக இருப்பதும், 100 பேரில் ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசாருக்கு உடல் பரிசோதனை நடத்தப்படும். அதில் 3 சோதனைக்குள் உடல் எடையை குறைக்க தவறினால் அவர்களது சம்பளத்தில் 8 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலாவது நம் ஊர் போலீஸ்துறை அதிகாரிகளின் தொப்பைகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

English summary
Police officers who fail a mandatory annual fitness test three times in a row will face disciplinary action and pay cuts, but top brass have insisted they are 'not looking for supermen'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X