For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உபரி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ 90000 கோடி திரட்ட அரசு திட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

Telecom
டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் உபரியாக உள்ள அலைக்கற்றைகள் மற்றும் தற்போது ரத்து செய்யப்பட்ட 2 ஜி லைசென்ஸ்களை விற்பனை செய்வதன் மூலம் அரசு ரூ 90000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த தொகை அரசின் நிதி நெருக்கடியை பெருமளவு குறைக்க உதவும் என நம்பப்படுகிறது.

அடுத்த மூன்றாண்டுகளில் இந்த ஏலம் படிப்படியாக நடக்கும்.

நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் இதுகுறித்து கூறியிருந்தார் பிரணாப் முகர்ஜி.

அவரது திட்டப்படி, வரும் நிதியாண்டில் ரூ58,217 கோடி வரியல்லாத வருமானம் ஈட்ட வேண்டும். நடப்பு நிதியாண்டில் இது ரூ16,550 கோடியாக மட்டுமே உள்ளது. இதில் அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ 40 ஆயிரம் கோடி கிடைக்கும். அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தலா ரூ25 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

இப்போது செல்போன் நிறுவனங்களிடம் உபரியாக உள்ள 6.2 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை, மத்திய அரசிடம் உள்ள அலைக்கற்றை விற்பனை மற்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்த 122 வட்டங்களுக்கான 2ஜி அலைக்கற்றையை மீண்டும் ஏலம் விடுவது ஆகியவற்றின் மூலம் இந்த தொகை கிடைக்கும்.

செல்போன் நிறுவனங்களிடம் உபரியாக உள்ள அலைக்கற்றை காரணமாக அரசுக்கு கடந்த ஆண்டில் ரூ36,993 கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை தலைமை அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

English summary
Non-tax revenue is an important, if unpredictable, element of the government’s efforts to balance its books for 2012-13. The government is expected to auction more than 500 megahertz (MHz) of 2G spectrum in the coming fiscal year after the Supreme Court ordered the cancellation of 122 telecom licences belonging to nine companies. A consultant described the Rs. 40,000 crore the government expects to raise from spectrum sales as “an aggressive target”, given the current state of the telecom business in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X