For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தடம் புரண்டது' தினேஷ் திரிவேதியின் பதவி-ராஜினாமா செய்தார்!

Google Oneindia Tamil News

Dinesh Trivedi
டெல்லி: ஒரு வழியாக தான் நினைத்ததை சாதித்த விட்டார் மமதா பானர்ஜி. அவரது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி விலகியே ஆக வேண்டும் என்று அவர் முரண்டு பிடித்ததைத் தொடர்ந்து தற்போது திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொல்கத்தாவிலிருந்து நேற்று மாலை டெல்லி கிளம்பிய மமதா இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தினேஷ் திரிவேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார், கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ராஜிநாமா கடிதம் அளிப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார் மமதா.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேதியும் தனது ராஜினாமா முடிவை உறுதிப்படுத்தினார். கட்சித் தலைவர் மம்தாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும்படி மம்தா கேட்டுக் கொண்டார். கட்சித் தலைமை உத்தரவுக்குக் கட்டுப்படுவேன் என்றார் அவர்.

ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து பயணிகள் கட்டணத்தையும் ஏற்றி விட்டார் திரிவேதி. இதனால் மமதா கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து திரிவேதியை தூக்கி விட்டு, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக உள்ள முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குமாறு அவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து திரிவேதி ராஜினாமா கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை திரிவேதியும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மறுத்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது திரிவேதி விலகியுள்ளார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நி்லவி வந்த பெரும் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் பட்ஜெட் தாக்கல் செய்த சில நாட்களிலேயே ஒரு அமைச்சர் பதவி விலகுவது என்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அவரது பதவி விலகலுக்கு பட்ஜெட்டே காரணம் என்பதும் இந்திய அரசியலில் புதிது.

English summary
After a waiting game that lasted for five days, Dinesh Trivedi finally resigned as the Railways Minister on Sunday. "I got stuck into the confusion and that is why I called her...She told me that I have to step down...I am a soldier of my party and I have to obey the directions of my party and high command," Trivedi said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X