For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்த பிறகு மத்திய அரசு ஆய்வு செய்யும்: சொல்கிறார் கிருஷ்ணா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் நகலை ஆய்வு செய்து, தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசித்த பிறகே இந்தியா ஒரு முடிவு எடுக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திராவிடக் கட்சிகள் உள்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தீர்மானம் முழு வடிவம் பெற்ற பிறகு அதை ஆய்வு செய்து, தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா தமிழக எம்.பி.க்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் அவர்களை கலந்தாலோசித்த பிறகே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது.

English summary
External affairs minister SM Krishna has told that centre will study the draft of the resolution against Sri Lanka and will discuss with TN MPs before taking any decision. Dravidian parties are mounting pressure on centre insisting it to support the UN resolution against Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X