• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை விவகாரம்: பிரதமர், எஸ்.எம்.கிருஷ்ணா ஆளுக்கொரு பேச்சு- மீண்டும் நாடகம்?

|
Manmohan singh and SM Krishna
சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை உறுதிபட ஆதரிக்கிறோம் என்று இந்தியா இதுவரை அறிவிக்கவே இல்லை. இதை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டுத் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். திமுக மேலும் ஒரு படி மேலே போய் இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்றும் சூசகமாக தெரிவித்தது. சூட்டோடு சூடாக நாளைக்கு தனது கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தையும் அது கூட்டியுள்ளது.

இந்த நிலையில்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளு்மன்றத்தில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் வழக்கம் போல இலங்கைக்கு இந்தியா செய்துள்ள நல உதவிகளையும், எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்ட அவர், அமெரிக்க தீர்மானம் குறித்துக் குறிப்பிடுகையில் அதில் என்ன சொல்லியுள்ளனர் என்பது தெரியவில்லை. தீர்மானம் படித்துப் பார்க்கப்படும். இருந்தாலும் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்தியா மும்முரமாக உள்ளது என்று கூறினார்.

தீர்மானத்தை ஆதரிப்போம் என்ற ரீதியில் பிரதமர் இப்படிக் கூறியுள்ளார். ஆனால் மத்திய வெளியுறவுத்துறை எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேச்சு வேறு மார்க்கமாக உள்ளது. இதில் யார் சொல்வதை நம்புவது, எது உண்மை, எது அதிகாரப்பூர்வமானது என்பது குழப்பமாக உள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் தீர்மானம் முழு வடிவம் பெறட்டும். பிறகு அதை ஆய்வு செய்து, தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பிரதமரின் பேச்சுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் இந்த ஆய்வுப் பேச்சுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம், இடைவெளி உள்ளது. இதனால் மத்திய அரசின் உண்மையான நிலை என்ன என்பது புரியவில்லை.

பிரதமர் எடுப்பதுதான் இறுதியான நிலைப்பாடாக இருக்க முடியும். அவர் முடிவு செய்வதுதான் மத்திய அரசின் முடிவாக இருக்க முடியும். அவர் எடுக்கும் முடிவைத்தான், மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும். ஆனால் பிரதமரும் சரி, எஸ்.எம்.கிருஷ்ணாவும் சரி, பிரணாப் முகர்ஜியும் சரி, யாருமே ஒரே மாதிரியாக இதுவரை பேசவில்லை. மத்திய வெளியுறவு அமைச்சகமும் இந்த பிரச்சினை தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.

எனவே ஒரு வேளை பிரதமரின் இன்றைய பேச்சு திமுகவால் புதிய தலைவலி ஏற்படாமல் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுகிறது. மொத்தத்தி்ல ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது இந்தியா எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதைப் பார்த்த பிறகுதான் இந்தியாவின் உண்மையான நிலையை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
PM Manmohan SIngh says that india will support US backed resolution against Sri Lanka in UNHRC. But external affairs minister S.M.Krishna says india will analyse the resolution after it get final shape. This seems very contradictory and confusing and one has to wait and watch to know the 'real' decision of India.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more