• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார் முகுல் ராய்

By Mathi
Google Oneindia Tamil News

Mukul Roy
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முகுல்ராய் புதிய அமைச்சராகி உள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.பிக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முகுல்ராய் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

English summary
Trinamool Congress' Mukul Roy was sworn-in on Tuesday as Railway Minister to replace his party colleague Dinesh Trivedi, who was forced to resign over the fare hike controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X