For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் கேஸ், டீசல் விலை உயரும்: பிரணாப் முகர்ஜி

By Siva
Google Oneindia Tamil News

Pranabh Mukherjee
டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கேஸ், டீசல் விலை உயரும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டிருக்கையில் கேஸ், டீசல் விலையை உயர்த்தாமல் பணவீக்கத்தை மத்திய அரசு எப்படி கட்டுப்படுத்தும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு டீசல், கேஸ் விலை உயர்த்துவது குறித்து நான் அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பங்குதாரர்கள் ஆகியோருடன் ஆலோசித்து ஒரு முடிவு எடுப்பேன். கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவது பற்றி பங்குதாரர்களுடன் பேசி இந்த பிரச்சனையை சமாளிக்க வழிவகை செய்யப்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.14.73ம், லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.30.10ம் மற்றும் ஒரு கேஸ் சிலிண்டருக்கு ரூ. 439.50ம் நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.

இந்த நிதியாண்டில் எரிபொருள் மானியமாக அரசு ரூ.65,000 கோடி வழங்கியுள்ளது. இதை வரும் 2012-13ம் ஆண்டில் ரூ.40,000 ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

English summary
Finance minister Pranabh Mukherjee has hinted that diesel, gas prices will increase after the budget session of the parliamnet. He is planning to have talks with chief ministers, political leaders and stakeholders about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X