For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் பேரவையில் எம்.எல்.ஏக்கள் சீன் படம் பார்க்கவில்லை: தடவியல் துறை விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

Gujarat Assembly
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் சீன் படம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இருவரது ஐபேட் கைபேசிகளில் ஆட்சேபனைக்குரிய (சீன் படம்) காட்சிகள் எதுவும் இல்லை என்று தடவியல் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதுதான் இதற்குக் காரணம்!

குஜராத் மாநில சட்டப்பேரவையில் பேரவை நிகழ்ச்சிகளின் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சங்கர் செளத்ரி, ஜீதா பர்வத் ஆகியோர் தங்களது கைபேசிகளில் ஆபாச படம் பார்த்ததாக பரபரப்பான புகார் விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்து தங்களது கைபேசிகளை சபாநாயகர் கன்பத் வசவாவிடம் ஒப்படைத்தனர். அவரும் இரண்டு கைபேசிகளையும் தடவியல்துறை

பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் கடந்த 3 நாட்களாக குஜராத் மாநில பேரவையில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனையால் நேற்று ஒருநாள் முழுவதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர்.

இன்றுகாலையிலும் குஜராத் பேரவையில் இந்த பிரச்சனை வெடித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய கைபேசிகளில் ஆபாச படம் எதுவும் இல்லை என்று அம்மாநில தடவியல் துறை, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்தது.

இதையடுத்து இரண்டு எம்.எல்.ஏக்களும் ஆபாச படம் பார்க்கவில்லை என்று சபாநாயகர் விளக்கிவிட்டதால் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் சற்றே ரிலாக்ஸ் ஆகியிருக்கின்றனர்.

English summary
Two BJP MLAs accused of watching obscene pictures on an ipad in the Gujarat Assembly have been given a clean chit by the Forensic Science Laboratory (FSL) here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X