For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா இலங்கையின் நிலம், கடற் பகுதிகளை ஆக்கிரமிக்கப் பார்க்கிறதாம்: சொல்கிறார் இலங்கை தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியா இரங்கிப் பேசுவது தான் இலங்கை அரசின் இறுமாப்பிற்கு காரணம் என்று இலங்கையின் இடதுசாரி முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இப்படி இந்தியா இரங்கிப் போவது தான் இலங்கை அரசின் இறுமாப்பிற்கு காரணம்.

உண்மையில் இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உரிமைகள் கிடைப்பதை விரும்பவில்லை. மாறாக இலங்கையின் நிலம் மற்றும் கடல் பகுதிகளை ஆக்கிரமிக்கவே விரும்புகின்றன. அதனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது என்றார்.

English summary
India is responsible for the arrogance of Sri Lankan government as it behaves so nicely, said Sri Lanka's Left Front leader Vikaramabahu Karunaratne. He has accused India and US of keen in grabbing the land and sea areas of Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X