For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போஸ்கோவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதி தற்காலிக நிறுத்தம்

By Mathi
Google Oneindia Tamil News

POSCO
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் ரூ50 ஆயிரம் கோடி மதிப்பிலான போஸ்கோ இரும்பாலை அமைப்பதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொடுத்திருந்த அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை நிறுத்திவைப்பதாகவும் புதிய அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது டிரிபியூனல் குற்றச்சாட்டு. மேலும் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் அளவுக்கு இரும்புத்தாது எடுக்கப்படுவதன் மூலமான பாதிப்பையே சுற்றுச் சூழல் அமைச்சகம் கவனத்தில் கொண்டு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் போஸ்கோ நிறுவனமே ஆண்டுக்கு 12 மில்லியன் இரும்புத் தாது எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பை கருத்தில் கொள்ளாமலேயே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன்சிங் உறுதி

அணுபாதுகாப்பு மாநாட்டிற்காக தென்கொரியா சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தினர் . அப்போது தென்கொரிய நிறுவனமான போஸ்கோ ஆலை விரைந்து செய்ல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இத்தகைய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In a major set back to Korean steel major, the National Green Tribunal today suspends environment clearance given to Posco project in Odisha.The National Green Tribunal has suspended the environment clearance given to Posco Steel. The clearance was given a year ago by the then environment minister Jairam Ramesh. The National Green Tribunal noted, "Environment clearance stands quashed, fresh terms of reference must be issued."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X