For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமஜெயம் உடலுக்கு அழகிரி, கனிமொழி, தயாநிதி கண்ணீர் அஞ்சலி!

Google Oneindia Tamil News

Azhagiri homage to Ramajeyam
திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் உடலுக்கு இன்று திமுக முன்னணித் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திமுக முன்னணியினர் பெருமளவில் திரண்டு வந்திருநதனர்.

திமுகவை பெருமளவில் உலுக்கியுள்ளது ராமஜெயத்தின் படுகொலை. திமுகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் கே.என்.நேருவின் தம்பிக்கு ஏற்பட்ட கதி, திமுக தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமஜெயத்தின் அகால மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் திமுகவினர் திருச்சியில் குவி்ந்தனர். முன்னணித் தலைவர்களும் பெருமளவில் திரண்டு வந்தனர். நேற்றே ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோரும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேருவுக்கும் ஆறுதல் கூறினர்.

பாமக இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல முக்கிய திமுக தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நெப்போலியன் உள்ளிட்ட பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தே மயானத்திற்கு வந்தனர்.

English summary
DMK bigwigs including M.K.Azhagiri, Kanimozhi and others paid their last homage to murdered Ramajeyam in Trichy today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X