For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6மாநிலங்களில்1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்க அஞ்சல் துறை முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

Post Office
டெல்லி: இந்திய அஞ்சல் துறை சார்பில் 1,000 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களை (ஏ.டி.எம்) நிறுவ திட்டமிட்டுள்ளது.

அசாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் ரூ.1,877.20 கோடி செலவில் இந்த மையங்கள் அமையவுள்ளன. இதற்கான பணிகள் நடப்பு ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளன.

நவீனப்படுத்தும் விதமாகவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை கருத்தில் கொண்டும் செயல்பட தொடங்கியுள்ள தபால் துறை, ஏ.டி.எம். இயந்திரங்களை அமைத்து இயக்க தேவையான கம்ப்ïட்டர் தொழில்நுட்ப பணிகளுக்காக இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., சிஃபி மற்றும் ரிலையன்ஸ் கம்ïனிகேஷன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்களை அணுகியுள்ளது.

கடந்த நிதி ஆண்டு நிலவரப்படி, 24,000 அலுவலகங்களை கணினிமயமாக்கியுள்ள இந்திய தபால் துறை 2013-ஆம் ஆண்டுக்குள் மொத்தமுள்ள 1.55 லட்சம் அலுவலகங்களையும் கணினிமயமாக்க திட்டமிட்டுள்ளது.

English summary
The Department of Post (DoP) is on a technology upgrade drive. The department plans to set up 1,000 automated teller machines (ATMs) across six states —Assam, Uttar Pradesh, Rajasthan, Maharashtra, Karnataka and Tamil Nadu — as part of its ongoing modernisation drive, said Manjula Parasher, secretary, posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X