For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2035க்குள் 60 அணு உலைகள் கட்ட இந்தியா திட்டம்

By Siva
Google Oneindia Tamil News

Nuclear Reactors
சென்னை: வரும் 2035ம் ஆண்டுக்குள் 60 அணு உலைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக இந்திய அணு சக்தி கழக நிர்வாக இயக்குனர் எஸ். கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அணு சக்தி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இந்திய அணு சக்தி கழக நிர்வாக இயக்குனர் எஸ். கே. ஜெயின் பேசியதாவது,

நாட்டின் மின்தேவை பெருமளவு அணு சக்தியை சார்ந்தே உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் 45 அணு உலைகள் மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 2035ம் ஆண்டிற்குள் 60 அணு உலைகள் கட்டப்படும். அணு உலைகள் அமைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய அனல் மின் கழகத்துடன் சேர்ந்து இந்த அணு உலைகள் அமைக்கப்படுகின்றன என்றார்.

கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கவே அப்பகுதிகள் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாதக் கணக்கில் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் மேலும் 60 அணு உலைகள் அமைக்கப்படுகிறதாம்.

English summary
S K Jain, CMD of Nuclear Power Corporation of India Ltd (NPCIL) has told that 60 more nuclear reactors will be set up in the nation before 2035. The places for the nuclear reactors are already selected, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X