For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''ராமதாஸ் 10 சீட் வாங்கட்டும்.. நான் கட்சியையே கலைத்து விடுகிறேன்''!

By Chakra
Google Oneindia Tamil News

Velmurugan
ஸ்ரீஷ்ணம்: 2016-ல் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பா்மக ஆட்சியை பிடிப்போம் என்கிறார் ராமதாஸ். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா்மக தனித்து போட்டியிட்டு 10 எம்.பி. சீட்டை பிடித்துவிட்டால் நான் ஆரம்பித்த இந்தக் கட்சியை கலைத்து விடுகிறேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய வேல்முருகன்,

இட ஒதுக்கீடுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு நமது கட்சிக்காக 21 பேர் உயிர் தியாகம் செய்தனர். அவர்கள் குடும்பங்கள் இன்று வரை கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளன. அவர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டது தான் நான் செய்த துரோகமா?.

தானே புயலால் கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது தன்னார்வ தொண்டு நிறுவனம் நான் உள்பட உதவிகளை செய்தோம். ஆனால் டாக்டர் ராமதாஸ் அல்லது அவருடைய மகன் அன்புமணி ஏதாவது உதவிகள் செய்தார்களா?.

வன்னியர் கல்வி அறக்கட்டளை கோவில் என பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அது வன்னியர்கள் உண்டியல் குலுக்கியும் நன்கொடையாக அளித்த தொகையில் கட்டப்பட்டதற்கு ராமதாஸ் மனைவி சரஸ்வதி பெயரை வைத்தீர்கள்.

வன்னியர் சமுதாயத்திற்காக போராடி உயிர் நீத்த பெயர்களை இக்கட்டிடத்தை நினைவாக வையுங்கள் என்று சொன்ன நான் துரோகியா?.

நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது என்னுடைய பேச்சை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நிமிர்ந்து பார்த்து ரசிப்பார். நீங்கள் என்னை கட்சிவிட்டு நீக்கிய போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள். பெரிய பொறுப்பு தருகிறோம் என்றார்கள்.

ஆனால் நான் பதவிக்கு ஆசைபடுபவன் இல்லை. தமிழக மக்கள் அனைத்து சாதியினருக்கும் வன்னியர் இன மக்களுக்கும் ஜாதி பாரபட்சம் பாராமல் பாடுபடதான் இந்த கட்சியை பெருந்திரளான இளைஞர்கள் ஆதரவோடு ஆரம்பித்தேன்.

2016-ல் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பா்மக ஆட்சியை பிடிப்போம் என்கிறார் ராமதாஸ். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா்மக தனித்து போட்டியிட்டு 10 எம்.பி. சீட்டை பிடித்துவிட்டால் நான் ஆரம்பித்த இந்தக் கட்சியை கலைத்து விடுகிறேன். இது பா்மக நிறுவனத் தலைவர் ராமதாசுக்கு சவாலாகவே விடுகிறேன் என்றார் வேல்முருகன்.

English summary
Let PMK founder Ramdoss win 10 seats in Parliament elections, by contesting alone, I will dissolve my party, said Tamilaga Vazhvurimai Katchi leader Velmurugan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X