For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12 அம்ச கோரிக்கைளை முன்வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம்

By Siva
Google Oneindia Tamil News

TASMAC
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் சென்னை அண்ணா சாலை மின்சார வாரியத்திற்கு பின்புறம் நாளை(5ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு துவங்கும் போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. மாநில தலைவர் எஸ். எஸ். தியாகராதன் தலைமையில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் துவக்கி வைக்கிறார். பொதுச் செயலாளர் தனசேகரன் வரவேற்புரையாற்றுகிறார். நிர்வாகிகள் மோகன், கே.ரவி, லட்சுமணன், சேக்கிழார், வஹிதா நிஜாம் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளு்ககு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TASMAC employees to go on fast tomorrow in Chennai puttingforth 12 demands including salary hike. CPI state secretary Tha. Pandian will kick start the fast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X