For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா ஹாக்கி அணிோயை பாகிஸ்தானுக்கு அனுப்பக் கூடாது:பாக். தீவிரவாத கவுன்சில்

By Siva
Google Oneindia Tamil News

லாகூர்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை தனது இந்திய பயணத்தை ரத்து செய்யுமாறு அந்நாட்டு தீவிரவாத கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ளதை எதிர்க்கும் வகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டெஃபா இ பாகிஸ்தான் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 40 தீவிரவாத குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பு தான் இந்த கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கவுன்சிலின் தலைவர் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சர்தாரி இந்தியாவுக்கு போகக் கூடாது. அதே போன்று இந்தியாவும் அதன் ஹாக்கி அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பக் கூடாது. இதை வலியுறுத்தி இன்று தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போகிறோம் என்றார்.

சர்தாரி ஒரு நாள் பயணமாக வரும் 8ம் தேதி இந்தியா வருகிறார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் வழிபடுவதற்காகத் தான் இந்தியா வருகிறார். அஜ்மீருக்கு செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Pakistan based terrorist forum has warned president Asif Ali Zardari to cancel his trip to India protesting US bounty on LeT chief Hafiz Saeed. It has also warned India not to send its hockey team to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X