• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டுகிறது

By Mathi
|

Indian Overseas Bank
டெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில் கிளைகளின் எண்ணிக்கையை 15 விழுக்காடு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்ட உள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் கிளைகள் தொடங்கப்பட உள்ளன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது மொத்தம் 2629 கிளைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் 400 கிளைகளை நாடு முழுவதும் தொடங்க இருக்கிறது.

பன்னாட்டு மற்றும் உள் நாட்டு வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இளநிலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கான அதிகாரிகள் என பல்வேறு தரப்பில் கூடுதலாக 3,500 பேரை பணியமர்த்தவும் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதேபோல் நிர்வாக வசதிக்காக ஒன்பது மண்டல அலுவலகங்களை தொடங்க உள்ளது..

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தமது இரண்டாவது கிளையையும் இந்தியன் ஓவர்சீஸ் துவக்குகிறது.

English summary
Indian Overseas Bank (IOB) plans to expand its branch network by 15% this fiscal, including China and Dubai, and hire 3,500 staff to exploit rising trade between the nations and soaring consumerism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X