For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன் கொலை வழக்கு: புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜர்

By Chakra
Google Oneindia Tamil News

Jeyandrar
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு சம்பந்தமாக புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் இன்று நேரில் ஆஜராயினர்.

இந்தக் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இங்கு நீதிபதியாக இருந்த ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்நிலையில், நீதிபதி ராமசாமி வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருடன் டெலிபோனில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒரு ஆடியோ கேசட்டும் வெளியானது. இதையடுத்து, டேப் விவகாரத்தில் நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டு வழக்கை நீதிபதி சி.எஸ்.முருகன் வழக்கை விசாரித்து வருகிறார்.

கடந்த 30ம் தேதி சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை நடந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.

இதனையடுத்து விசாரணையை 9ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் ஆஜராயினர்.

இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயேந்திரருக்கும், விஜயேந்திரருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Kanchi seer Jeyandrar and Vijeyendrar apperared in Puducherry court today in connection with Shankarraman murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X