For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வினாடிக்கு 100 எம்பி வேகத்தில் 4ஜி சேவை: ஏர்டெல் தொடங்கியது!

By Shankar
Google Oneindia Tamil News

Airtel Logo
கொல்கத்தா: 4ஜி தொழில்நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.

இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

4ஜி தொழில்நுட்பத்திலான சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் முதல்முறையாக தொடங்க உள்ளது.

இந்த சேவை மூலம் வினாடிக்கு 100 மெகாபைட்ஸ் அளவுக்கு வேகம் இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு கொல்கத்தாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவைக்கு மாதம் ரூ. 999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வயர்லெஸ் மோடம்கள் ரூ 7750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 ஜிக்கான மல்டி மோட் டாங்கிள் (டேடா கார்டு) விலை ரூ. 7999 ஆகும்.

இப்போதுள்ள 3 ஜி சேவையில் 21 எம்பி வரைதான் தரவிறக்க வேகம் இருக்கும். ஆனால் 4 ஜியில் இது வினாடிக்கு 100 எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவைத் தொடர்ந்து, மராட்டியம், பஞ்சாப் மற்றும் கர்நாடகத்தில் இந்த சேவையை ஏர்டெல் தொடங்க உள்ளது.

சகல வசதிகளும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய் திறக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharti Airtel today launched India’s first 4G services in Kolkata. Airtel has launched the service on a state-of-the-art network based on TD-LTE, making India one of the first countries in the world to commercially deploy this cutting-edge technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X