For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை 24 நாளில் அதிரடியாக இடம் மாற்றம் செய்தார் அகிலேஷ்யாதவ்

By Mathi
Google Oneindia Tamil News

Akhilesh Yadav
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்ற 24 நாட்களுக்குள் 1000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தற்போது மாற்றம் செய்துள்ள பெரும்பாலான அதிகாரிகள் முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு விசுவாசமாக இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய அதிரடி மாற்றமானது உத்தரப்பிரதேச அரசாங்க நிர்வாகத்தில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களிடமிருந்து மாயாவதி தனிமைப்பட்டிருந்த நிலையை மாற்றுவதற்காகவும் மாயாவதியை அதிகாரிகள் ஆட்டுவித்த சூழலை தவிர்க்கவுமே ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை அகிலேஷ் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்ற போது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அகிலேஷ் கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு ஏப்ரல் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவைப் பெறப்போவதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

இவற்றை செயல்படுத்தினால்தான் ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை இடமாற்றம் செய்தது நியாயம் என மக்கள் புரிந்து கொள்வர்.

English summary
Uttar Pradesh's new Chief Minister Akhilesh Yadav has transferred more than a 1000 officers since he took over as the head of the state 24 days ago. Most of these are top ranking bureaucrats thought to be loyalists of former UP Chief Minister Mayawati. Reports suggest these transfers have created a complete chaos in the state machinery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X