For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறுதி கட்டத்தை நெருங்கும் சங்கரராமன் கொலை வழக்கு: வக்கீல்கள் வாதம் தொடங்கியது

By Chakra
Google Oneindia Tamil News

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் இன்று தொடங்கியது.

காஞ்சி சங்கரமட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசிய சிடி வெளியானதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, வழக்கை நீதிபதி சி.எஸ்.முருகன் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன் உள்பட 21 பேர் ஆஜரானார்கள். ரஜினிகாந்த், 'தில்' பாண்டியன், அருண் ஆகியோர் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணை காலை 11.10 மணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் அமர வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது பத்திரிகையாளர்கள், வழக்குக்கு தொடர்புடையவர்கள் தவிர அனைவரையும் வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் வழக்கு விசாரணை நடந்தது.

சங்கராச்சாரியார்கள் தரப்பில் வெங்கட சுப்ரமணியம், லட்சுமண ரெட்டியார் உள்பட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.

விசாரணை 12.15 மணி வரை நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞரின் விளக்கம் நேற்றுடன் நிறைவுபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்றும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இன்று வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் இன்று ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் ஆஜராகவில்லை. ரகு, சுந்தரேச அய்யர், அப்பு உள்ளிட்ட 17 பேர் ஆஜராகி இருந்தனர்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் தன்னுடைய வாதத்தை தொடங்கி பேசுகையில், குற்றம் சட்டப்பட்டுள்ளவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குகள் உள்ளது, எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதை விளக்கினார். வழக்கறிஞர்கள் வாதம் நாளையும் தொடர்கிறது.

இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கி உள்ளதால் வழக்கு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், ஜூன் மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Arguments in the Sankararaman murder case, in which Kanchi mutt seer Jayendra Saraswati and his junior Vijayendra Saraswati are the main accused, will commence in a local court here today. Both the Seers were among the 21 accused present in court yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X