For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரே நாளில் ரூ20 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது!

By Mathi
Google Oneindia Tamil News

Infosys
பெங்களூர்: மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ20 ஆயிரம் கோடி சரிவை கடந்த வியாழன்று மட்டும் சந்தித்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டை ஒப்பிடும்போது ரூ2316 கோடி லாபம் ஈட்டிருக்கிறது.

இருப்பினும் சர்வதேச பொருளாதார மந்த நிலையால் நடப்பு ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகத்தான் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் ரூ20 ஆயிரம் கோடி இழப்பை அந்நிறுவனம் சந்திக்க நேரிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்கொண்ட மிகப் பெரிய சரிவு இது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சிபுலால், சர்வதேச பொருளாதார மந்தநிலை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு ஒரு சவாலாக உள்ளது என்கிறார்.

நடப்பு நிதி ஆண்டில், பீ.பி.ஓ. சேவையில் 13,000 பேர் உள்பட மொத்தம் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனமும், துணை நிறுவனங்களும் மொத்தம் 10,676 பேருக்கு வேலை அளித்துள்ளன.

English summary
In its biggest fall in nearly three years, Infosys today plummeted by about 13 per cent, wiping out nearly Rs 20,000 crore in market value, as disgruntled investors resorted to hectic selling after a muted revenue guidance for the current fiscal by the software bellwether.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X