For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு முழுவதும் இன்று 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்

By Mathi
Google Oneindia Tamil News

polio drops
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லு£ரி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் 40,000 போலியோ சொட்டு மருந்து சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதலாக 1000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள் செயல்படும்.

900க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன. சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 வரை மையம் செயல்படும்.

முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும் அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம், இந்திய குழந்தைகள் கழகம். லயன்ஸ் கிளப், ஆகியவைகளும் ஈடுபடுகின்றன. 2 லட்சம் பணியாளர்கள் இம் முகாமில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
The State health department made elaborate arrangements for the second phase of pulse polio campaign which began today. During the first phase conducted in February, over 70 lakh children were given polio drops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X