For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசமான வானிலை: அக்னி-5 சோதனை நாளை வரை ஒத்திவைப்பு

By Siva
Google Oneindia Tamil News

Agni
டெல்லி: 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை சோதனை மோசமான வானிலை காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்படுகிறது.

முன்னதாக ஏவுகணை சோதனை இன்று இரவு மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. இருப்பீனும் சோதனை நடைபெறவிருந்த ஒரிசாவின் வீலர் தீவு பகுதியில் மின்னல் வெட்டியதாலும், வானிலை மோசமாக இருந்ததாலும் சோதனை, நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது நமது படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

English summary
India is test firing ts 5,000 km range Inter-Continental Ballistic Missile (ICBM) Agni-5 today in Wheeler Island off the coast of Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X