For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு

By Chakra
Google Oneindia Tamil News

School Book
சென்னை: சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் என்.ஆர். சிவபதி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் கல்வி தரத்தை தேசிய- உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.

கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல் உள்பட தேவைப்படும் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அதே போல மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380 பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

English summary
Tamil Nadu government has formed a expert team under education minister to bring changes in school curriculam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X