For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி நிறுவனத்தை காப்பாற்ற முயன்ற விவகாரம்: ஐ.ஜி. பிரமோத் குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Google Oneindia Tamil News

சென்னை: மோசடி நிதி நிறுவனத்தை காப்பாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்ப்டடுள்ள மேற்கு மண்டல ஐ.ஜி பிரமோத் குமாரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் பாசி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனம் சுமார் ரூ.500 கோடி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோசடி நிறுவனம் என்று பெயரெடுத்த பாசியை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு இது குறித்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஐ.ஜி பிரமோத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எந்த நேரத்திலும் தான் கைதாகலாம் என்று நினைத்த ஐ.ஜி. பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

English summary
Chennai high court has rejected the anticipatory bail plea of West Zone IG Pramod Kumar. He was accused of trying to help a finance company that allegedly swindled Rs.500 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X