For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'BBB' ல் இருந்து 'BBB(-)': இந்தியாவின் பொருளாதார தர வரிசையை குறைத்தது எஸ் அண்ட் பி!

By Chakra
Google Oneindia Tamil News

Standard & Poor
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும் நாட்டின் தர வரிசையை உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதுவரை 'BBB' என்ற நிலையில் இருந்த இந்தியாவின் தர வரிசையை 'BBB(-)' என்ற எதிர்மறையான நிலைக்குக் குறைத்துள்ளது எஸ் அண்ட் பி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கிவிட்டதாலும், முதலீடுகள் குறைந்துவிட்டதாலும், கடன் அளவு அதிகரித்து வருவதாலும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது.

2012-13ம் நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதைவிட 2 சதவீதம் அதிகமாகும்.

மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலும், மானியங்களின் அளவைக் குறைத்து நிதி நிலையை சீர் செய்வதிலும் இந்தியா பின்தங்கி வருவதாகவும் எஸ் அண்ட் பி கூறியுள்ளது.

இந்த தரக் குறைப்பு காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை மறுபரிசீலனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று கடந்த வாரம் சர்வதேச நிதியமான IMF அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Ratings agency Standard & Poor's on Wednesday cut India's outlook to negative from stable, citing slow progress on its fiscal situation, as well as deteriorating economic indicators. Stating that India's investment and economic growth have slowed, Standard & Poor's (S&P) revised its outlook for the Indian economy to negative and gave it a rating of BBB(-) affirmed from stable. India was earlier rated at BBB levels by the agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X