For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போசிஸ், விப்ரோ டிசிஎஸ் தர வரிசையும் 'நெகடிவ்' ஆக குறைப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: இன்போசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகிய சாப்ட்வேர் நிறுவனங்களின் எதிர்கால நிலை குறித்த தர வரிசையை உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) குறைத்துள்ளது.

முன்னதாக இந்தியாவின் தர வரிசையை 'BBB(-)' என்ற எதிர்மறையான நிலைக்குக் குறைத்தது எஸ் அண்ட் பி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாலும், அரசின் பணப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும் இந்த நடவடிக்கையை எஸ் அண்ட் பி எடுத்தது. இதுவரை 'BBB' என்ற நிலையில் இருந்த இந்தியாவின் தர வரிசையை 'BBB(-)' என்ற எதிர்மறையான நிலைக்குக் குறைத்தது.

இந் நிலையில் இன்போசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகிய இந்தியாவின் முதல் மூன்று முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் உடனடி எதிர்கால தர வரிசையை 'நெகடிவ்' என்ற நிலைக்குக் குறைத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் நீண்டகால கடன் தர வரிசையை தொடர்ந்து BBB+ என்ற நிலையிலேயே தொடர்வதாகவும் எஸ் அண்ட் பி அறிவித்துள்ளது.

English summary
Rating agency Standard & Poor's (S&P) on Wednesday revised outlook for three top Indian information technology companies -- Infosys, Tata Consultancy Services (TCS) and Wipro -- to negative from stable. At the same time, it affirmed its 'BBB+' long-term corporate credit ratings on these entities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X