For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஜிட்டல் மயத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையால் மீண்டும் கட்டண சேனல்களின் கோரப் பிடியில் சிக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கேபிள் டிவி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க நிறுவன தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. சென்னை நகரிலும் அரசு கேபிள் டி.வி.யை விரிவு செய்வதை வரவேற்கிறோம். கட்டண சேனல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு வருகிறோம். இதுவரை 97 கட்டண சேனல்கள் அரசு கேபிளில் வருகிறது. இடம் பெறாத மற்ற கட்டண சேனல்களுடன் அரசு பேசி வருகிறது. இதில் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.

ஜுன் மாத இறுதிக்குள் பொதுமக்கள் அனைவரும் செட்டாப் பாக்ஸ் மூலம்தான் கேபிள்டி.வி. படம் பார்க்க முடியும் என்ற நிலையினை டிராய்' எடுத்துள்ளது. இது சரியானது அல்ல. சென்னையில் இப்போது 4 லட்சம் செட் அப் பாக்ஸ்கூட இல்லை. இந்த நிலையில் 2 மாதத்தில் ஏறத்தாழ 30 லட்சம் செட்டப் பாக்ஸ்களை கொண்டுவருவது என்பது சாத்தியமானது அல்ல.

டிஜிட்டல் மயமாக்கல் என்பது அவசியமான தேவைதான். ஆனால் அதற்கும் கால அவகாசம் தேவை. அதேபோல் இதற்காக பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டிய தொகை எவ்வளவு? என்பது போன்ற கட்டண விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால் குழப்பமான நிலை உள்ளது.

தமிழக அரசு கட்டண சேனல் என்ற கோர பிடியில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தது. ஆனால் மத்திய அரசு எங்களை கட்டண சேனலுக்கு இரையாக்க முடிக்கிறது. உதாரணமாக ஐ.பி.எல். பார்க்க ரூ.6 கட்டணம் என்றால், இனி அது ரூ.54 ஆக உயரும் வாய்ப்பு உருவாகும்.

பொதுமக்களை பாதிக்கும் நிலை உருவாகமல் தடுக்க பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுக்க உள்ளோம். தமிழக முதல்வரிடமும் இதுபற்றி பேச உள்ளோம் என்றார் அவர்.

இருக்கிறோம். இதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மாநிலத்தில் உள்ள கேபிள்டி.வி. ஆபரேட்டர்களும் பங்கேற்கின்றனர். இது குறித்து தமிழக முதலமைச்சரையும் சந்தித்து பேச இருக்கிறோம் என்றார் அவர்.

English summary
The TamilNadu Cable TV Operators has opposed the Trai's move to digitisation cable network and imposing set top boxes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X