For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும்?

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் வெளியாகக் கூடும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஒரு மையத்திலும் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மற்றொரு மையத்திலும் திருத்தப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 27ந் தேதி முடிவடைந்தது. சுமார் 75 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. மதிப்பெண் பட்டியல் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்கு 2.25 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி மே 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பின்னர் மதிப்பெண் பதிவு செய்து தேர்வு துறைக்கு அனுப்பப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க 10 நாட்கள் ஆகும். எனவே பிளஸ் டூ தேர்வு முடிவு மே 10ந் தேதியிலிருந்து 15ந் தேதிக்குள் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.

English summary
The +2 examination result is likely to be published by May 10, official sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X