For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆட்சியர் பொறுப்பிலிருந்து அலெக்ஸ்பால் மேனன் விடுவிப்பு-விடுப்பில் செல்கிறார்

மாவோயிஸ்டுகளின் பிடியில் 13 நாட்கள் இருந்த அலெக்ஸ்பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார். இன்று காலை அவர் சுக்மாவில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் அவர் சுக்மா மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்குப் பதிலாக தண்டேவடா ஆட்சியர் செளத்ரி பொறுப்பேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அலெக்ஸ் பால் மேனன் விடுமுறையில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் சில ஊடகங்கள் சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங்கை மேற்கோள்காட்டிஅலெக்ஸ் பால் மேனன் தொடர்ந்தும் சுக்மா மாவட்ட ஆட்சியராக நீடிப்பார் என்று கூறுகின்றன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!