For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ண மேனன் பிறந்த நாளில் விடுலையான அலெக்ஸ் பால் மேனன்!

Google Oneindia Tamil News

சென்னை: கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்தினருக்கு நேற்று இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தது. அவர் விடுதலையான தினமும், மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் பிறந்த தினமும் ஒன்றாக அமைந்ததே அதற்குக் காரணம்.

கிருஷ்ண மேனனுக்கும், அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கலெக்டர் அலெக்ஸின் தந்தை வரதாஸ், கிருஷ்ண மேனன் மீது அதிக பற்று கொண்டவர். இதன் காரணமாகவே தனது மகன் பிறந்ததும் பெயர் வைத்தபோது அலெக்ஸ் பால் என்ற பெயருடன் மேனனையும் இணைத்து வைத்தார்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார். என்ன ஆச்சரியம்... நேற்றுதான் கிருஷ்ண மேனனின் பிறந்த நாள். இதனால் அலெக்ஸ் குடும்பத்தினர் குறிப்பாக அவரது தந்தை வரதாஸ் பெரும் மகிழ்ச்சியுடன் இதைச் சொல்லியபடி காணப்பட்டார்.

அலெக்ஸ் பால் மேனன் விடுதலையை அவரது மறுபிறப்பாக குடும்பத்தினர் கருதுகின்றனர். மேலும் கிருஷ்ண மேனன் பிறந்த நாளில் அலெக்ஸ் பால் மேனன் விடுதலையானது அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது.

English summary
There was extra cheers for the family of Alex Paul Menon. He was named after Former defence minister VK Krishna Menon. Yesterday was the 116th birth day of Krishna Menon. So the family was full of cheers after Alex was released from Maoists captive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X