For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு அருகே துண்டிக்கப்பட்ட தலை சிக்கியது... முண்டம் எங்கே?

Google Oneindia Tamil News

C V Shanmugam
திண்டிவனம்: மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடு அருகே ஒரு தலை சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அந்த தலைக்குரிய உடலைக் காணவில்லை.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது வீடு திண்டிவனத்தில் உள்ளது. இவரது வீட்டுக்கு அருகே காந்தி சிலை ஒன்று உள்ளது. அந்த சிலைக்கு அருகே ஓடும் கால்வாயில் ஒரு தலை கிடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பதறிப் போன போலீஸார் விரைந்து வந்தனர். அந்த தலையை மீட்டுள்ளனர். உடல் எங்கே என்று தெரியவில்லை.

இது யாருடைய தலை, கொலை எங்கே நடந்தது, கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

அமைச்சர் வீட்டுக்கு அருகிலேயே கொலே செய்யப்பட்டவரின் தலையை வீசி விட்டுச் சென்ற செயல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
A severed head has been recovered near School education minister C V Shanmugam's house in Tindivanam today. Police are investigating and searching for the body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X