For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் 73 சதவீத பெண்களுக்கு 'நைட் ஷிப்ட்' பயம்!

By Siva
Google Oneindia Tamil News

Bangalore women scared on night shift
பெங்களூர்: பெங்களூரில் பணிபுரியும் பெண்களில் குறைந்தது 73 சதவீதம் பேர் நைட் ஷிப்டில் வேலைபார்க்க அஞ்சுகின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிபிஓவில் பணிபுரிந்த பெண் ஊழியர் கம்பெனி கார் டிரைவரால் கெடுத்து கொல்லப்பட்டார். அதன் பிறகு நைட் ஷிப்டில் பணிபுரிவது குறித்து அசோசம் சர்வே நடத்தியது.

அதில் குறைந்தது 73 சதவீதம் பெண்கள் நைட் ஷிப்ட்டில் பணிபுரிய பயப்படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 49 சதவீதம் பேர் நைட் ஷிப்ட்டின்போது எங்கேயும் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர். இருட்டிவிட்டால் பாதுகாப்பில்லை என்று நடுத்தர நிறுவனங்களில் வேலை பார்க்கும் 28 சதவீதம் பெண்கள் கருதுகிறார்கள். மேலும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் 23 சதவீத பெண்கள் இரவு நேரத்தில் வேலைக்கு வர அஞ்சுகிறார்கள்.

இது குறித்து அசோசம் தலைவர் டி.எஸ். ரவாத் கூறுகையில்,

பிபிஓக்கள், ஐடிஇஎஸ், ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் வேலை விட்டு செல்லும்போது தான் தாக்கப்படுகிறார்கள். அதனால் இந்த துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றார்.

35 சதவீத லெதர் நிறுவன பணியாளர்களும், 22 சதவீத ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்களும், 53 சதவீத மருத்துவமனை ஊழியர்களும் இரவு நேரத்தில் பணிபுரிய அஞ்சுகிறார்கள்.

English summary
A survey by Associated Chambers of Commerce and Industry (ASSOCHAM) Social Development Foundation said that at least 73 per cent women felt insecure while working at night in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X