For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு தேசிய விருது

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: காடுகளைப் பாதுகாப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாக முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 985 சதுர கிமீ உள்ளடக்கியது. இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம் கடந்த 1995ம் ஆண்டு உலக வங்கி மூலம் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்துள்ளது

இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 11 புலிகள் காப்பகத்திற்கு ஒவ்வொரு வகையில் சிறந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகள் புலிகள் காப்பக வல்லுனர்கள் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
The 24-year-old Kalakkad – Mundanthurai Tiger Reserve (KMTR), spread over 895 square kilometres on the southern tip of the Western Ghats with rich biodiversity, has bagged the National Tiger Conservation Authority (NTCA) award in the ‘Best coexistence and buffer zone management' category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X